Type Here to Get Search Results !

சிக்கன் பிரியாணி செய்வதற்கான ரகசிய டிப்ஸ்கள்

சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி செய்வதற்கான ரகசிய டிப்ஸ்கள்


தேவையான பொருட்கள்
கோழி கறி (பெரிய துண்டாக) - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பட்டை - 5
கிராம்பு - 5
அன்னாசி பூ - 3
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி
புதினா தழை - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
1.
கோழிக்கறி துண்டுகளை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

2.
பெரிய வெங்கயம், பச்சை மிளகாயை தனித்தனியே நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

3.
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஆகிய இரண்டையும் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

5.
அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

6.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.

7.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, புதினா தழை, கொத்தமல்லித்தழை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை (சுமார் 3 நிமிடம் மிதமான தீயில்) நன்கு வதக்கவும்.

8.
அதனுடன் கோழிக்கறி சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.

9.
பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். 

10.
அதில் அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பிரியாணி அரிசி என்றால் 1 மடங்கு அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர்) குக்கர் மூடி போட்டு விசில் போடாமல் வேக விடவும். 

11.
விசில் துவாரம் வழியாக ஆவி வந்ததும் மூடியைத் திறந்து காரம், உப்பு சரியாக உள்ளதா எனப் பார்த்து, தேவையானதைச் சேர்த்துக் கொள்ளவும்.

12.
பின்னர் ஊற வைத்த பிரியாணி அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் 2 விசில் வரும் வரை (சுமார் 15 நிமிடம் வரை) வேகவிடவும்.

13.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்பு
1.
தண்ணீர் அளவு : பாசுமதி அரிசி - 1 மடங்கு அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர், புழுங்கல் அரிசி - 1 மடங்கு அரிசிக்கு 2 3/4 மடங்கு தண்ணீர், பச்சை அரிசி - 1 மடங்கு அரிசிக்கு 2 1/2 மடங்கு தண்ணீர்.

2.
கடைசியாக அரிசி வெந்து 2 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி குக்கர் மூடியைத் திறந்து பார்க்கும் போது தண்ணீர் இருந்தால் சிறிது நேரம் மிதமான தீயில் வேக விடவும்.

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad