மார்பக மசாஜ்வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக
பகுதியை தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களின் அளவை பெரிதாக்க முடியுமாம்.
மசாஜ் செய்வதால் மார்பக பகுதி திசுக்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், மேலும் திசுக்களை அழுத்தி பெரிது செய்யும் என கூறபடுகிறது.
மசாஜ் செய்வதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய்யை உபயோகிக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் மசாஜ் செய்யும்
முறை:
எண்ணையை இரண்டு உள்ளங்கைகளிலும் வைத்து இரண்டு அல்லது மூன்று
நிமிடம் கைகளை தேய்த்து சூடு வர வைக்க வேண்டும்.
எண்ணெய் சூடாகிய பிறகு எண்ணெய் தடவிய கைகளை மார்பகங்களின் மீது
வைத்து லேசான அழுத்தத்துடன் சுழற்சி முறையில் வட்டமாக தேய்க்க வேண்டும்.
இப்படியாக 100 அல்லது
300 முறை சுற்றி சுற்றி காலை மற்றும்
இரவு படுக்க போகும் முன் தேய்க்க வேண்டும்.
இந்த முறையை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதம் செய்து
வந்தால் நல்ல பலன் தெரியும்.
கோதுமைஎண்ணெய் மசாஜ்(Wheat germ oil):
கோதுமை எண்ணை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது அதை வாங்கி
மார்பகங்களின் மீது தடவுவதால் ரத்த ஓட்டம் அதிகரித்து திசுக்களுக்கு தேவையான oxygen மற்றும் ஊட்டச்சத்து கிடைக்க
செய்கிறது. மேலும் இதிலுள்ள அதிகபடியான வைட்டமின் ஈ மார்பகங்கள்
தொய்வுபெருவதிளிருந்து தடுக்கிறது.
மசாஜ் செய்யும் முறை:
கோதுமை எண்ணையை தடவி சுமார் 10 நிமிடம்
வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து ஒரு
மாதத்திற்கு செய்தால் நல்ல பலன் தெரியும்.
மார்பகங்களின் அளவை கூட்டுவதில் வெந்தயத்திற்கு
பெரும் பங்கிருப்பதாக மூலிகை மருத்துவர்கள் கருதுகிறார்கள். பெண்களின் மார்பக
வளர்ச்சிக்கு துணைபுரியும் estrogen மற்றும் progesterone
அதிகரிப்பதற்கு வெந்தயம் உதவி செய்கிறது.
அதனால் தான் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களின்
மார்பகங்களில் அதிகமாக தாய்பால் சுரக்க வெந்தயம் சிறந்த இயற்க்கை உணவாக
இருந்துவருகிறது. சரி வெந்தயத்தை வைத்து எப்படி மார்பகங்களை பெரிதாக வளர செய்யலாம்
என தெரிந்துகொள்வோம்.
நான்கில் ஒரு பங்கு அளவிற்கு ஒரு கப்பில் வெந்தய பொடியை எடுத்து அதனுடன்
மார்பகங்களின் மீது பூசி மசாஜ் செய்யும் பதத்திற்கு சிறிது தண்ணீர் சேர்த்து பசை
போல் ஆக்கி, அந்த பசையை மார்பங்கள் மீது பூசி மெதுவாக மசாஜ்
செய்துவிட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டுவிட்டு பிறகு
தண்ணீரில் கழுவி விடவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்.
வெந்தய பொடி தயாரிக்கும் முறை: தயார் செய்வதற்கு வெந்தயத்தை வறுத்து போடி செய்து
வைத்துகொள்ள வேண்டும்.
வெந்தய எண்ணை மசாஜ்: வெந்தய எண்ணை கிடைத்தால் அதைக்கொண்டோ அல்லது ஒரு பங்கு
வெந்தய எண்ணையுடன் இரண்டு பங்கு பாடி லோசன் கலந்தோ மார்பகங்களை மசாஜ் செய்யலாம்.
முளை கட்டிய வெந்தயம்: உங்களுடைய அன்றாட உணவில் முளை கட்டிய வேந்தையதையும்
சேர்த்துகொள்ளலாம்.
பெருஞ்சீரகம் (Funnel Seeds): பெருஜீரகத்தில் flavonoids அதிக அளவில் இருப்பதால் பெண்களுக்கு தேவையான estrogen
அளவை கூட்டுவதற்கு இந்த பெருஞ்சீரகம் உதவி
செய்கிறது. இதனால் மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.
பெருஞ்சீரக டீ |
மார்பக வளர்ச்சியை தூண்டுவதற்கு பெருஞ்சீரகத்தை கொண்டு மசாஜ் செய்யவும், உணவாகவும் எடுத்துகொள்ளலாம்.
பெருஞ்சீரக மசாஜ்: ஒரு டேபிள்ஸ்பூன் காட் லிவர் ஆயில் உடன் 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு
சூடு படுத்த வேண்டும். பெருஞ்சீரகம் சிவப்பாக மாறியவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு
எண்ணையின் சூட்டை தனியவிடவேண்டும். பிறகு எண்ணையை வடிகட்டி எடுத்து மர்பங்களின்
மீது பூசி 10 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு அப்படியே சுமார் 30
நிமிடம் விட்டுவிட்டு பிறகு கழுவி விடலாம்.
இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில்
தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு செய்துவரலாம்.
பெருஞ்சீரக டீ: பெருஞ்சீரகத்தை டீ போன்று செய்தும் குடிக்கலாம். அப்படி
செய்வதற்கு ஒரு கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் பெருஞ்சீரக சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி மிதமான சூட்டில் பருகலாம்.
பெண்கள் மார்பக
வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்..
வெளிநாட்டு பெண்கள்
தன்னை அழகாக காட்டிக்கொள்ள தனது மார்பகங்களை பெரிதாக மாற்றுவதற்காக பிளாஸ்டிக்
மற்றும் சிலிகான் அறுவை சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர். ஆனால் அவர்கள்
செய்துகொண்ட அறுவை சிகிச்சையால் உடல் உபாதைகளும் அடைகின்றனர்.
அதுபோலல்லாமல் இயற்கையாகவே மார்பக அழகை
கூட்டுவதற்கும், மார்பகத்தை பெரிது படுத்துவதற்கும் சில
உடற்பயிற்சிகள் உள்ளன, அவைகள் என்னென்ன என காண்போம்.
மார்பக உடல் பயிற்சி:
ஒரு சில வகை
உடற்பயிற்சிகள் பெண்கள் மார்பகம் வளருவதற்கும், கட்டுகோப்பான மார்பக அழகை பெறுவதற்கும் துணைபுரியும்.
ஆங்கிலத்தில் அவற்றை pushups, wall pushups, crossover pushups, bench
presses, chest presses and chest compressions என சொல்வார்கள். இது
போன்ற உடற்பயிற்சிகள் தோள்பட்டை மற்றும் கைகளின் அசைவால் செய்யப்படுவதால்
மார்பகத்தை சுற்றியுள்ள தோல் மற்றும் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து
மார்பகம் மற்றும் மார்பகத்தை சுற்றியுள்ள பகுதிகள் அழகு பெரும்.