குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்.
பச்சிளம் குழந்தை, பிறந்து ஒரு வருடத்திற்குள் அந்த குழந்தைக்கு மொட்டை ( #HeadShave
) அடிக்கவேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகி
விடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு. ஒருவேளை மொட்டை அடிக்காமல்
விட்டுவிட்டால் என்னாகும். அதுகுறித்த பின்னணி தகவல்களை இங்கு விரிவாக காண்போம்.
பெரும்பாலான சமயங்களில் மொட்டை அடிக்கும்
பழக்கம் இருந்து வருகிறது. இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம், இஸ்லாம் சமயம், ரோமன் கேத்தோலிக்ஸ் போன்ற சமயங்களை பின்பற்றுபவர்கள்,
தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும்
பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இளம் தம்பதியர்கள் சிலர் தங்கள் குழந்தைக்கு
மொட்டை அடிப்பது குற்றம், தவறு, ஏதோ மனநல பிரச்னை
இருக்கிறது போல தோன்றலாம் என நினைத்துக்கொண்டு இன்று வரை மொட்டை அடிக்காமலே
இருக்கின்றனர். குழந்தைகளுக்கு மொட்டை அவசியமா? மொட்டை அடிக்க கூடாதா? மொட்டை அடிப்பது ஏன்? (Scientific reasons behind
Tonsuring) இதைப் பற்றிப் பார்க்கலாம்.
குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்? அதன் காரணம் என்ன?பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்
மரத்தில், செடியில் கிளையில் உள்ள இலைகளை கழித்துவிட்டால் மரமோ செடியோ
அதன் சக்தியை இலைகள் இல்லாத இடத்துக்குத் திருப்பி இலைகள் மீண்டும் வளரும்படி தன் ஆற்றலை
பாய்ச்சும்.
அதுபோல, மொட்டை அடித்தால்,
உடலும் அந்த இடத்தில் தன் ஆற்றலை பாய்ச்சி சற்று
உறுதியான, ஆரோக்கியமான முடியை வளர வைக்கும். முன்பு
இருந்தது போல இல்லாமல் முடி அடர்த்தியாகவே வளரும் என சில ஞானிகளால்
சொல்லப்படுகிறது.
நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில்
இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக
கடல்நீரில் 5 நிமிடம் கைவைத்திருந்தாலே கை கழுவியபிறகும் கூட
உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10
மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல்
எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில்
தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.
அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை ( #HeadShave)
அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக
தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால்
இப்படிகூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும்
கேட்பர்.
எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின்
செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர் அதற்கு காரணம்,
ஒரு வயதில் அடித்த மொட்டையில் சிலகழிவுகள்
வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும். அதை
கண்டுகொள்ளாமல் பிறகு மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டுவிட்டால்,
பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை
அதீத அளவு ஏற்படுத்தும்.
பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்
- நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை தூண்டப்பட மொட்டை அடிக்கும்
பழக்கம் உதவுகிறது.
- குழந்தைக்கு பல் வளரும்போது மொட்டை
அடிக்கலாம் எனும் பழக்கம் தொடர்கிறது. பல் வளர்ச்சி இருக்கும்போது உடல் அதிக
வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும்.
இந்த தருணங்களில் மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.
- இதனால் மூளை வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக
சொல்லப்படுகிறது. ஆனால், நிருபிக்கப்படவில்லை.
- ஸ்கால்ப் (மண்டைத் தோலில்) உள்ள தொற்றுகள்,
பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை மொட்டை அடிப்பதால் நீங்குகின்றன.
- இதனால் முடி வளர மிகவும் உதவுகிறது.
- வெயில் காலங்களில் முடி எடுப்பதால்,
வியர்த்தலால் ஏற்படும் பிரச்னைகளும்
தடுக்கப்படுகின்றன.
- மொட்டை அடித்த பிறகான சில காலம் வரை
தலையைப் பராமரிக்க எளிது. பேன், தொற்றுகள் ஆகியவை இருக்காது.
அறிவியல் நன்மைகளும் காரணங்களும்…
- விட்டமின் டி சத்து எளிதில் கிடைக்க
உதவுகிறது. இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக
இருக்கும்.
- குழந்தையின் முடி மிக மெலியதாக இருக்கும்.
மொட்டை அடித்த பின் திக்காக வளரும்.
எப்போது மொட்டை அடிக்கலாம்?
9 மாதம், 11 மாதம், 1 வயது, 3 அல்லது 5 வயதில் மொட்டை அடிக்கலாம்.
குழந்தைக்கு மொட்டை போடும்போதும் போட்ட பிறகும்
மறக்காமல் செய்யவேண்டியவைகள்:-
- நீங்கள் மொட்டை அடிப்பதாக இருந்தால்
குழந்தைக்கு காற்று போகும்படியான சௌகரியமான உடைகளை அணிந்துவிடுங்கள்.
- மொட்டை போட்டு குளித்து வந்தவுடன் தலையை
போட்டு தேய்க்காமல், மெதுவாக டவலால் ஒத்தி
எடுங்கள்.
- தலையில் வெண்ணெய் அல்லது தயிர் பூசி,
அதன் பிறகு சந்தனம் பூசலாம். எரிச்சலைக்
குறைக்கும்.
- மொட்டை அடித்து ஓரிரு வாரம் வரை ஷாம்பு
பயன்படுத்த வேண்டாம்.
மொட்டை அடித்த பின்பு தலை பராமறிப்பு முறைகள்:-
- நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும்.
- இரும்பு சத்து உணவுகள், விட்டமின் சி உணவுகள் முடி வளர்ச்சிக்கு
மிக மிக முக்கியம்.
- பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள், பூசணி கூழ், பரங்கிக்காய் கூழ், சக்கரைவள்ளிகிழங்கு கூழ், பப்பாளி, ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள்,
பிரவுன் அரிசி புட்டு, ராகி புட்டு கொடுக்கலாம்.
- தினமும் தலையில் எண்ணெய்த் தடவுங்கள்.
ஆர்கானிக் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்,
பாதாம் எண்ணெய் தடவலாம். மண்டைத்தோலுக்கு
எண்ணெய் அவசியம். சருமத்தை சரியான பதத்தில் வைத்திருக்கும், நரம்புகள் தூண்டப்படும், செதிலாக மாறுவது, அரிப்பு போன்றவை வராது.