நோயின்றி வாழ இரவில் இவற்றை தவிர்த்து விடுங்கள்
ஜீரணமாகாத உணவு பொருட்களை இரவில் சாப்பிட
கூடாது. அப்படி சாப்பிட்டால், இரவில்
தூக்கம் கெடுவதோடு அல்லாமல்
பல உடல்நல பிரச்சனைகளுக்கும் வலி வகுக்கும்.
குறிப்பாக நீரிழிவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், உடல்
பருமன் போன்றவை சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால் எற்படும். இரவில் எளிதில்
ஜீரணமாகக்கூடிய, குறைவான உணவுகளை சாப்பிட
வேண்டும்.
இரவில் சாப்பிட கூடாத உணவுகள் :
கெட்டி தயிர்:
கெட்டி
தயிர் எளிதில் ஜீரணமாகாது.
இரவில் அதை சாப்பிட்டால் கபத்தை பாதித்து நோய் வர செய்யும்.
இரவில் தயிர் சாப்பிட்டால் ஏற்கனவே நீங்கள்
சாப்பிடவை அனைத்தும்
ஜீரணமாவதை தடுக்கும். ஊளைச் சதைதான் வளரும்.
தயிர் தரும் மந்த தன்மையால் சிந்திக்கும் திறன் குறைந்து
செயல் பாட்டில் குறை ஏற்பட்டு நாளடைவில் சோம்பேறியாக போய்விடுவீர்கள்.
தயிர் சாதத்துடன் பச்சடி, அப்பளத்துடன்
புலி இஞ்சி, சேர்த்து இரவு நேரத்தில்
சாப்பிட கூடாது.
கடைந்த மோர் தான் நல்லது. அதிலும் ஒரு பங்கு தயிர் என்றால்
மூன்று பங்கு தண்ணீர் இருக்க வேண்டும்.
நெல்லிக்காய் :
நெல்லிக்காய், பச்சை காய்கறிகளையும் இரவில் சாப்பிட கூடாது. வேக வைத்த
காய்கறிகள்தான் சிறந்தது.
கொஞ்சம் கடினமான நார் சத்தான ஒரு சில கீரைகள், பாகற்காய் போன்றவை ஜீரணமாக நேரம் எடுக்கும் . அதனால் அவற்றை
இரவில் சாப்பிட கூடாது.
மேலும் முக்கியமாக காலையில் சமைத்த உணவை ப்ரிஜில் வைத்து
சூடு படுத்தி சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
டீ,காபி
போன்ற உற்சாக பானங்களை இரவில் சாப்பிட்டால் தூக்கத்தை கெடுக்கும்.
அது மட்டும் அல்லாமல் அசைவம் சாப்பிட்டால் அது ஜீரணமாக
மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆக கூடும். அதனால் ஜீரண கோளாறு, வாயு தொல்லை ஏற்பட்டு தூங்க முடியாமல் போய்விடும்.
அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ மாலை நேரத்திலோ சாப்பிடுவது
நல்லது.
இரவில் காரம் அல்லது எண்ணெய் பொருள்களை அறவே தவிர்ப்பது
நல்லது.
எண்ணெய் மற்றும் நெய்யில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால்
அது ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இரவு நேரங்களில் நாம் தூங்கும், அந்த எட்டு மணி நேரம் தான் நமது உடலில் மூளை மற்றும் இதயம்
தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வெடுக்கும்.
இரவு நேரத்தில் அவற்றுக்கு அதிக வேலை கொடுப்பது நல்லதல்ல.
பொதுவாக இரவில் நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த
பொறித்த உணவுகள், மசாலா
உணவுகள், குல்ட்ரிங்க்ஸ் போன்ற உணவுகள் தவிர்ப்பது நல்லது. மசாலா
உணவுகள் அசிடிட்டியை உண்டாகும்.அசைவ மற்றும் பரோட்டா உணவுகள் மலசிக்கல்
ஏற்படுத்தும்.
சாம்பார், கொத்தமல்லி, புதினா, தேங்காய் அதில் செய்த சட்டினி
வகைகளை சிறிதளவு சாப்பிடும் போது நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.
முக்கியமாக இரவு ஏழு – எட்டு மணி அளவில் சாப்பிட வேண்டும்.
தூங்க செல்லும் முன் அறை வயிறாகதான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும் ஒரு
டம்ளர் பாலுடன் ஒரு பழம் சேர்த்து சாப்பிடலாம்.
இதனை நீங்கள் மட்டும் செய்து பார்த்து விட்டு ஆரோக்கியமாக
வாழ்வதோடு அல்லாமல் உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கூறி அவர்களையும் ஆரோக்கியமாக
வாழ உதவுங்கள்